விழுப்புரம் கரும்பு விவசாயிகள் கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்
விழுப்புரத்தில் நடைபெற்ற கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் தமிழக முதல்வர ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்
தமிழக முதல்வருக்கு கரும்பு விவசாய சங்கம் நன்றி தெரிவித்தனர்.
கடந்த 2020-2021 ஆம் ஆண்டு கரும்பு பருவத்திற்கு கரும்பிற்கு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ. 192.50-யை விவசாயிகளுக்காக, கரும்பு ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்ததற்கும், பொங்கலுக்குள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய இருப்பதற்கும், தமிழக முதல்வருக்கு முண்டியம்பாக்கம் கரும்பு விவசாய சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் நன்றி தெரிவித்தனர்.
முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பேரவைக் கூட்டம், விழுப்புரம் கரும்பு திருமண மண்டபத்தில் 05.01.2022 புதன்கிழமை நடைபெற்றது, கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கடந்த 2020-2021 ஆம் ஆண்டு கரும்பு பருவத்திற்கு கரும்பிற்கு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ. 192.50-யை விவசாயிகளுக்காக, கரும்பு ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்ததற்கும், பொங்கலுக்குள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யஇருப்பதற்கும், தமிழக முதல்வர் அவர்களுக்கு முண்டியம்பாக்கம் கரும்பு விவசாய சங்கத்தின் பேரவைக் கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது,
2021-2022 ஆம் ஆண்டு கரும்பு அறவை பருவத்திற்கு மத்திய, மாநில அரசுகளிடம் டன் ஒன்றிற்கு ரூ. 4,000/-ம் வயல் விலையாக வழங்க வேண்டும். கரும்பு வெட்டுக்கூலி முழுவதும் ஆலை நிர்வாகநே ஏற்றுக்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்வது.விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்பிற்கு கிரையத் தொகையை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
ஆலை நிர்வாகம் கரும்பு பிழித்திறனை காரணம் காட்டாமல், கரும்பிற்கு மத்திய அரசு அறிவிக்கும் விலையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்,கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு விதைக் கரணைகளை முழுவதும் இலவசமாக வழங்க வேண்டும். விவசாயிகள் சங்கமும், ஆலை நிர்வாகமும் பேசி முடிவு எடுத்து சங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நான்கு ஆண்டு கரும்பு நிலுவைத் தொகை ரூ.160/-ஐ உடனடியாக வழங்க வேண்டும். கரும்பு நடவு செய்யும் விவசாயிகள் விரும்புகின்ற ரக கரும்புகளை நடவு செய்ய ஆலையார் அனுமதி வழங்கியும், ஏற்பாடுகள் செய்ய வேண்டும்,
2021-2022 ஆம் ஆண்டு கரும்பு பருவத்திற்கு வழக்கம்போல் தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகையை ரூ.500/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும், விவசாயிகள் கரும்பு வெட்டிய உடன் தோகைகளை தோகை அடிக்கும் இயந்திரம் மூலம் தூள் ஆக்குவதற்கு ஆகும் செலவை ஆலையாரே முழுவதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்,விவசாய உபகரணங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரியை விதிக்காமல், விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பி.கலிவரதன், இராஜாராமன், வெங்கடசாமி, கிருஷ்ணதாள், தண்டபாணி, காத்தவராயன், தேவேந்திரன், நடராஜன், விஜயகுமார், ரங்கநாதன், பாலசுப்பரமணியன், ராஜசேகர், நாராயணன், பெருமாள், மணிவண்ணன்,செந்தில்குமார், முத்துநாராயணன், மகேஸ்வரன், சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.