விழுப்புரம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி அலுவலர் ஆய்வு
விழுப்புரம் அருகே ஊராட்சி ஒன்றியதொடக்க பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் இன்று ஆய்வு செய்தார்.;
விழுப்புரம் கல்வி மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், மரகதபுரம் ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர்( பொ) இன்று 27/06/2022 திங்கட்கிழமை நேரில் சென்று எண்ணும், எழுத்தும் பயிற்சி செயல்பாடுகள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.