இளைஞர்களை ஏமாற்றிய விழுப்புரம் திமுக வேட்பாளர்

விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளர் இந்த தெருவில் தான் வருகிறார் என அப்பகுதி இளைஞர்கள் ரோஸ் மாலையுடன் காத்திருக்க, இது தெரியாமல் வேறு தெருவுக்கு சென்ற வேட்பாளரால் இளைஞர்கள் ஏமாற்றமடைந்தனர்;

Update: 2021-03-29 08:50 GMT

விழுப்புரம் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் தொகுதிக்கு உட்பட்ட தந்தை பெரியார் நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட வந்திருந்தார். இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெரிய ரோஸ் மாலையுடன் காத்திருந்தனர், இது தெரியாமல் திமுக வேட்பாளர் பிரச்சார களைப்பில் அங்கிருந்த டீ கடையில் சாவகாசமாக டீ சாப்பிட்டு அந்த தெரு சாலை சரியில்லை என்பதால் அடுத்த தெருவுக்கு பிரச்சாரத்திற்கு சென்றார். அதனால் வேட்பாளரை வரவேற்க வெகுநேரம் வெயிலில் மாலையுடன் நின்று கொண்டிருந்த திமுக இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags:    

Similar News