விழுப்புரம் மாவட்டம் வளவனூர் காவல் நிலையத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் காவல் நிலையத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கொடுக்கப்பட்டது.;
தமிழக அளவில் சிறந்த காவல் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டு அவ்வப்போது விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவையே முன் மாதிரி காவல் நிலையங்களாகவும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தற்போது விழுப்புரம் மாவட்டம் வளவனூா் காவல் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது.இந்தக் காவல் நிலையத்துக்கு வழக்குகளை கையாளும் விதம், விசாரணை, சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்களை ஆராய்ந்து ஐ.எஸ்.ஓ. தரச்சான்றும், சுகாதாரம், பாதுகாப்பு அம்சங்கள், அடிப்படை வசதிகள், மேலாண்மை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து டபுல்யூ.ஏ.எஸ்.எச். (வாஷ்) தரச்சான்றும் அளிக்கப்பட்டது.
இதனிடையே, ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்று மற்ற காவல் நிலையங்களுக்கு முன் மாதிரியாக மாறியுள்ள வளவனூா் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏ.எஸ்.பி (பயிற்சி) கரன் கரட் தலைமையிலான போலீசாரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன், மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா ஆகியோா் பாராட்டு தெரிவித்தனர்.