விழுப்புரம் மாவட்டத்தில் அரிசி ஆலை தொழிலதிபர்கள் வேலை நிறுத்தம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளில் அரிசி தயாரிப்பு ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது;
அரிசி ஆலைகள் வேலை நிறுத்தம் காரணமாக வேலையின்றி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 256 அரிசி ஆலைகள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ததன் காரணமாக 3 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி, மற்றும் தொழிலாளர்கள் பாதிப்பட்டனர். பொதுமக்களின் அத்தியாவசிய உணவு பொருளான அரிசிக்கு 5 சதவிகித ஜி. எஸ். டி., வரி விதிக்கப்பட போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை கண்டித்து விழுப்புரம் மாவட்டடத்தில் உள்ள 256 அரிசி ஆலைகளில் வரி விதிப்பை ரத்து செய்ய கோரி அரிசி உற்பத்தியை நிறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி பாதிப்புக்குள்ளாகி பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பிற்கு ஆளாகினர். வேலை நிறுத்தம் காரணமாக அனைத்து அரிசி ஆலைகள் கதவுகள் அடைக்கப்பட்டு தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.