விழுப்புரம் மாவட்ட எல்லப்பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் போலீசார் வாகன சோதனை

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை எல்லை பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-23 12:40 GMT

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை நேற்று இரவு எட்டு மணி முதல் வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை 5 மணி வரை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையில் வாகன சோதனை நடவடிக்கை ஈடுபட்டனர்.

அப்போது தென் மாவட்டங்களில் இருந்து விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் வந்த வாகனங்களும், புதுவையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் வாகனங்களும், சென்னையிலிருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் வாகனங்களும், திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் வாகனங்களும், அந்தந்த சாலைகளிலும் மற்றும் சென்னை திருச்சி தேசிய 4 வழி சாலைகளின் எல்லையில் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டது.

திண்டிவனம் ஏ .டி. எஸ். பி,செஞ்சியில் டிஎஸ்பி, விழுப்புரம் டிஎஸ்பி ஆகியோர் தலைமையில் ஆங்காங்கே வாகன தணிக்கை செய்யப்பட்டது.

விழுப்புரம் டி.எஸ்பி. பார்த்திபன் தலைமையில் நள்ளிரவு 12 மணி அளவில் விழுப்புரம் நகரத்தில் சிக்னல் சந்திப்பிலும் அதனைத் தொடர்ந்து 2 மணி அளவில் கண்டமங்கலம் அருகிலும் 4 மணி அளவில் முகையூர் என்ற இடத்திலும், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் என்ற இடத்திலும் வாகன தணிக்கை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News