விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிரடி; 117 பேர் மீது நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையெட்டி மாவட்ட காவல்துறை சிறப்பு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 117 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Update: 2023-01-12 04:53 GMT

விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகம் (கோப்பு படம்)

விழுப்புரம் மாவட்டத்தில், போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் 64 பேர் கைது உட்பட 117 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் போலீசார் கடந்த 10- ம்தேதி  முதல், சிறப்பு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில், ரவுடியிச செயல்களில் ஈடுபடுபவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், சாராயம், குட்கா, கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி  நடந்த இந்த அதிரடி நடவடிக்கையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 5 பேரையும், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக 2 பேரையும், சாராய வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்த 10 பேரையும், நிலுவையில் உள்ள வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த பிடிவாரண்ட் குற்றவாளிகள் 47 பேரையும் ஆக மொத்தம் 64 பேரை போலீசார் கைது உட்பட 117 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி நடவடிக்கையானது பொங்கல் விழா முடியும் வரை தொடர்ந்து நடைபெறும் என்றும், பொங்கல் பண்டிகையை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News