குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 438 மனுக்கள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 438 மனுக்கள் பெறப்பட்டன;

Update: 2023-03-29 07:15 GMT

பைல் படம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 438 மனுக்கள்  பொதுமக்கள் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமையில் நடந்தது. இதில், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 438 பேர் மனு அளித்தனர்.  மனுக்களை பெற்றுக்கொண்ட  மாவட்ட ஆட்சியர் சி.பழனி,  அந்த மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ராவிஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு) சரஸ்வதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவா, மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் குறை தீர்க்கும் நாள் என்பது தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் அடிப்படைச்சேவைகளில் மக்களுக்கு ஏற்படும் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உரிய அலுவலர்களை அணுகிக் குறைகளைத் தெரிவிக்கும் நாளாகும். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று, மக்கள் குறை தீர்க்கும் நாள்  நடத்தப்படுடுகிறது. அன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் அந்தந்த பகுதிகளில் வாழ்கிற மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.

இது தவிர, மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் மாதத்தில் ஒரு நாள் ஒரு குக்கிராமத்திற்கு நேரடியாகச் சென்று முகாமிடுவர். மாவட்டத் தலைநகருக்குச் செல்லும் வாய்ப்பும் வசதியும் இல்லாத அப்பகுதி-சுற்று வட்டார ஏழை மக்கள் இந்த முகாமைப் பயன்கடுத்தத் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தெரிவிக்க லாம். இந்த நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலும் நடத்தப்படுவதுண்டு.  அவர்கள் குறைகளுக்கு அந்த முகாமிலேயே தீர்வு காணக்கூடிய நாள்  மக்கள் தொடர்புத்திட்ட நாள்  என்று அழைக்கப்படுகிறது

Tags:    

Similar News