விழுப்புரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் விறு, விறு வாக்குப் பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில், கொட்டும் மழையிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.;

Update: 2021-10-06 04:21 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தலில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 16 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 95 பேரும், 158 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 745 பேரும், 372 கிராம ஊராட்சித் தலைவருக்கு 1,459 பேரும், 2,751 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 8,574 பேரும் என 3,297 பதவியிடங்களுக்கு 10 ஆயிரத்து 873 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான ஓட்டுப்பதிவு 1,569 ஓட்டுச்சாவடி மையங்களில்  7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது,

இந்த முதல் கட்ட தேர்தலில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 919 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 79 ஆயிரத்து 475 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 65 பேர் என மொத்தம் 7 லட்சத்து 54 ஆயிரத்து 459 பேர் ஓட்டு போட உள்ளனர்.

அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது. மாவட்டத்தில்

டி.ஐ.ஜி. பாண்டியன் மேற்பார்வையில், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மாவட்டத்தில்

பதட்டம் நிறைந்த ஓட்டுச்சாவடிகளான 296 மற்றும் மிகவும் பதட்டமான 62 ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் இன்று உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க குடையுடன் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குசாவடி மையங்களுக்கு வந்து வாக்களித்துச் செல்கின்றனர்.

Tags:    

Similar News