விழுப்புரம் டிஐஜிக்கு கொரோனா
விழுப்புரம் டிஐஜி பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பணியாற்றி வந்த அலுவலர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, விழுப்புரம் சரக டிஐஜிக்கு கொரோனாபரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட்டது.
இதில் டி.ஐ.ஜி பாண்டியனுக்கு கொரானா இருப்பது உறுதியானது. டிஐஜி-க்கு கொரோனாஅறிகுறிகள் உள்ளதால் தன்னை வீட்டிலேயே தனிப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.