விழுப்புரம் மாவட்டத்தில் 131 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது
விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 42,278 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் இன்று மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை 329 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்
ஞாயிற்றுக்கிழமை மட்டும் 131 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 41,428 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 524 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.