விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதுவரை 54,455 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மாவட்டத்தில் இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இன்று புதன்கிழமை மட்டும் 52 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 53,848 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 241 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.