விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்று ஒரேநாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது; இதுவரை 54,327 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றியும், இன்று ஒருவரும் இறந்துள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இன்று வியாழகிழமை மட்டும் 231 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 52,968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; எஞ்சியுள்ள 993 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.