விழுப்புரம்: வாக்கு எண்ணிக்கை மைய முன்னேற்பாடுகளை கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.;
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, வருவாய் கோட்டாட்சியர் அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.