ரூ. 48 கோடியில் மேம்பாலம் கட்டும் இடத்தை விழுப்புரம் கலெக்டர் நேரில் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம்-மாரங்கியூர் இடையே ரூ.48 கோடியில் மேம்பாலம் கட்டப்படும் இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்
ரூ.48 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கான பணியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் விவசாயிகள் விவசாயப் விளைப் பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏதுவாக கிராமப்புற பகுதிகளில் சாலைகள் மற்றும் மேம்பாலம் உள்ளிட்ட கட்டமைப்புகள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கிராமப்புற சாலைகள், ஊரக வளர்ச்சித்துறை மூலமும் முக்கியமான சாலைகள், மேம்பாலங்கள் நெடுஞ்சாலைத் துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்குட்பட்ட, மாரங்கியனூர் முதல் ஏனாதிமங்கலம் வரை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஊரக நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உயர்மட்ட மேம்பாலம் பணி தொடங்குவது குறித்து மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இம்மேம்பால கட்டுமானம் மூலமாக சிறுவாகூர், கல்பட்டு, தெளி, ஏனாதிமங்கலம், மாரங்கியனூர் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்திற்கு மிக முக்கியமானதாக அமையும். இதனால், விவசாயிகள் விவசாய விளைப் பொருட்களை எளிதில் கொண்டு சென்று சந்தைப்படுத்திட முடியும் என் கலெக்டர் மோகன் தெரிவித்தார்.