விழுப்புரம் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஆட்சியர் மோகன் நேரில் ஆய்வு

Update: 2021-07-11 08:19 GMT

விழுப்புரம் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

விழுப்புரம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் திடீர் மழை மற்றும் இரவு நேரங்களில் விவசாயிகள் கொண்டு வரும்  நெல் மூட்டைகள் பாதுகாப்பாக  வைக்க ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில்   போதிய இட வசதி உள்ளதா என  மாவட்ட ஆட்சியர் மோகன்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நேரடி  நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அங்கேயே தேங்காமல் உடனுக்குடன் அரசு சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து வந்து பாதுகாப்பாக  வைக்க மாவட்ட ஆட்சியர் மோகன்  உத்தரவிட்டார்.

ஆய்வின்போது ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News