விழுப்புரம்: தூய்மை பணியாளர்கள் நலவாரிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் நலவாரிய அடையாள அட்டை பெற அழைக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-11-16 12:03 GMT

விழுப்புரம் கலெக்டர் மோகன்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் நலவாரிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

இது குறித்து ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பில் விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தாட்கோ மூலமாக தூய்மை பணியாளர் நலவாரிய அடையாள அட்டை,காப்பீட்டுத்திட்டம், இயற்கை மரண நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி, கல்வி உதவித்தொகை திருமண நிதியுதவி, மகப்பேறு கண்கண்ணாடி நிதியுதவி, கருச்சிதைவு, கருக்கலைப்பு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நிதியுதவி மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அமைப்பு சாரா தூய்மை பணியாளர்கள், விழுப்புரத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை நேரில் அணுகி உறுப்பினர் பதிவு விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர், உதவி செயற்பொறியாளர், செயல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் கையொப்பத்துடன், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தரைதளம் அறை எண்.17 ல் உள்ள தாட்கோ, மாவட்ட மேலாளர் விழுப்புரம் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News