விழுப்புரத்தில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்
நாளை மது கடைகள் திறப்பதை கண்டித்து விழுப்புரத்தில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
நாளை முதல் தொற்று பரவல் குறைவாக உள்ள மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் பாஜகவினர் நாளை மதுக்கடைகளை திறக்க கூடாது என வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.