விழுப்புரம்: மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் குவிந்த 364 மனுக்கள்
Grievance Complaint - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பல்வேறு குறைகள் சார்ந்த 364 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.;
Grievance Complaint -விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைகேட்புக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 364 மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்ட ஆட்சியர் மோகன், அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள், முதல்வரின் பசுமை வீடு திட்டத்தின்கீழ் வீடுகள் உளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
தொடர்ந்து, குறைகேட்புக் கூட்டத்தில், மாதாந்திர உதவித்தொகை வேண்டி விண்ணப்பம் அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக ஆணை வழங்க உத்தரவிட்டு, மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் மோகன் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், தனித்துறை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) விஸ்வநாதன், நில அளவை உதவி இயக்குநர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊராட்சி) சரவணன், உதவி ஆணையர் (கலால்) சிவா, கூட்டுறவுச் சங்கங்களின் இணை இயக்குநர் யசோதாதேவி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2