வெள்ளிமேடு பேட்டை -புதுச்சேரி நான்கு வழி சாலைப்பணி: அமைச்சர் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதி வெள்ளிமேடு பேட்டை புதுச்சேரி நான்கு வழி சாலைபணியை அமைச்சர் மஸ்தான் தொடக்கி வைத்தார்

Update: 2022-08-28 01:00 GMT

வெள்ளிமேடுபேட்டை முதல் புதுச்சேரி வரை ரூ.126½ கோடியில் நான்குவழி சாலைக்கான பூமி பூஜையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்

வெள்ளிமேடுபேட்டை புதுச்சேரி நான்கு வழி சாலை அமைச்சர் பூமி பூஜை

வெள்ளிமேடுபேட்டை முதல் புதுச்சேரி வரை ரூ.126½ கோடியில் நான்குவழி சாலைக்கான பூமி பூஜையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டையில் இருந்து மயிலம் வழியாக புதுச்சேரி செல்ல நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் திருப்பதி, வந்தவாசி, காஞ்சfபுரம், திருத்தணி, மயிலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றன.

இது தவிர மேற்கண்ட சாலையோரம் மயிலம் பகுதியில் கல்குவாரிகளும் செயல்பட்டு வருவதால் ஜல்லி, எம்.சாண்ட் போன்றவை ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரிகளும் வெளியூர்களுக்கு சென்று வருகின்றன. தினமும் இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியதோடு, அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வந்தது.

இதனால் இந்த சாலையை நான்குவழிச்சாலையாக மாற்றி விரிவாக்கம் செய்ய முடிவு செய்த தமிழக அரசு, அதற்காக சாலை மேம்பாடுத் திட்டத்தின் கீழ் ரூ.126 கோடியே 60 லட்சம் நிதியை ஒதுக்கியது.இதையடுத்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை மயிலத்தில் நடந்தது. மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், திண்டிவனம் சார் ஆட்சியர் அமித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட பொறியாளர் சிவனேசா வரவேற்றார்.

விழாவுக்கு தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை  வகித்து பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி நான்குவழிச்சாலை விரிவாக்கப்பணிகளை தொடங்கி வைத்தார். மயிலம் ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் ஷீலாதேவி, மாவட்ட குழு உறுப்பினர் விஜயன், ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், ஆலகிராமம் ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா சுரேஷ்குமார் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை பொறியாளர் ராமு நன்றி கூறினார்.

Tags:    

Similar News