வளவனூர்: 1500 பேருக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ
விழுப்புரம் மாவட்டம், வளவனூரில் ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சியில் 1500 பேருக்கு உணவு பொட்டலங்களை வழங்கி நிகழ்ச்சியை எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் தொடங்கி வைத்தார்.;
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் பேரூர் கழக சார்பில் 1 மற்றும் 2 வது வார்டு அம்பேத்கர் காலனி பகுதியில் ஜி.சிசுபாலன் ஏற்பாட்டில், ஒன்றினைவோம் வா என்ற நிகழ்ச்சியின் மூலம் சுமார் 1500 நபர்களுக்கு மதிய உணவை மாநில மருத்துவர் அணி இணைச்செயலாளரும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.இலட்சுமணன் பொதுமக்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.