உரிமம் பெறாத பெண், குழந்தைகள் விடுதிகள் மூடப்படும்: கலெக்டர் எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் உரிமம் பெறாத பெண் குழந்தைகள் விடுதிகள் மூடப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் தொண்டு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் பெண்கள், குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள், இல்லங்கள், தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் மகளிருக்கான விடுதிகள் போன்றவற்றை தமிழ்நாடு பெண்கள், குழந்தைகள் விடுதிகள், இல்லங்கள் சட்டத்தின்படி, கடந்த ஜூலை 1ந்தேதி முதல் இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு மாவட்டகலெக்டரின் மூலம் உரிமம் வழங்கப்படும். இணையதள வழியில் பதிவு செய்யாத இல்லங்கள், விடுதிகளை மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், நிா்வாகிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளாா்.