உக்ரைன் போர்: விழுப்புரம் மாவட்டத்தில் அவசர உதவி எண் அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் உக்ரைன் நாட்டில் இருந்தால் அவர்கள் உடனடியாக மாவட்ட அவசர என்னை அழைக்கலாம். கலெக்டர் தகவல்.
உக்ரைன் போர் அவசர உதவிக்கு அலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உக்ரைனில் இருப்பின், உதவிக்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொலைபேசி 04146-223265 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077.மேலும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களை 94450 08160 என்ற அலைபேசி எண்ணிலும், அலுவலக மேலாளர் (குற்றவியல்) அவர்களை 80721 95755 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.