விழுப்புரத்தில் குட்கா கடத்திய இருவர் கைது; வாகனம் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு பகுதியில் இருந்து குட்கா கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் காவல் நிலைய ஆய்வாளர் தீபா தலைமையிலான போலீசார் சிறுவந்தாடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர், அப்போது வேகமாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர், அதில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா கடத்தி வருவது கண்டுபிடிக்கபட்டது.
குட்கா கடத்தி வந்த நிதீஷ்குமார், சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.