பாதாள சாக்கடை பணிகளை குடிநீர் வடிகால் மேலாண்மை இயக்குநர் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி பகுதியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை பணிகளை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆய்வு செய்தார்.;

Update: 2021-12-18 13:46 GMT

பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்ட குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்

விழுப்புரம் நகராட்சியில் விஜிபி நகர், பாண்டியன் நகர்,வழுதரெட்டி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.

பாதாள சாக்கடை திட்ட பணிகளை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, மாவட்ட கலெக்டர் த.மோகன் ஆகியோர்  நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், வருவாய் கோட்டாட்சியர் கி.அரிதாஸ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர், கடலூர் பழனிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News