விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான சமூக பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்..

விழுப்புரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்றைய அரசியலும், திருநங்கைகளுக்கான சமூக பிரச்சினைகளும் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-11-05 17:21 GMT

கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி.

விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், இன்றைய அரசியலும் திருநங்கைகள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சனைகளும் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார்.

திருநங்கைகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியை மத்தியக் குழு உறுப்பினர் சம்பத் தொடங்கி வைத்து பேசினார். வழக்கறிஞர் ஆனந்தன், பேராசிரியர் மதுவந்தி, சுந்தரவள்ளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேசியதாவது:

பாலின நிகர் நிலைப் பயிற்சி எல்லா தளத்திலும் கொண்டு போகவேண்டும், நிகர்நிலைப் பயிற்சி ஆண் பெண்ணோடு நிறுத்திக் கொள்ளாமல், மாறிய பாலினம் பயிற்சியாக கொண்டு போகலாம், மாறிய பாலினத்தை நூற்றுக்கு 99 சதவீதம் குடும்பத்தினரால் கைவிடப்படுகின்றனர். அதனால் குடும்பத்தோடு பேச வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருநங்கைகளுக்காக போராடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் திருநங்கைகள் இணைய வேண்டும். தலித் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. சமத்துவ சமூகம் படைக்க வேண்டும் என்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது.

எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ அங்கெல்லாம் கிருஷ்ணர் வருகிறாரோ, இல்லையோ செங்கொடி வந்து நிற்கும். கேரளாவில் திருநகருக்காக கம்யூனிஸ்ட் அரசு ஒரு தனி பள்ளியை தொடங்கியது. ஆனால், அது வெற்றி பெறவில்லை. திருநர்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் அரசியல் பொருளாதாரம் சமூகத்தோடு இணைந்தது, தனிப்பட்ட கோரிக்கையாக போராடிக் கொண்டே பொது தளத்திலும் போராட வேண்டும்.

களப்போராட்டம் இல்லாமல் எந்த மாற்றமும் வந்து இருக்காது என்று தான் வரலாறு கூறுகிறது. திருநங்கைகளின் பிரச்சினைகளுக்காக போராட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இருக்கிறது. அரசாங்கத்தை நாங்கள் தட்டிக் கேட்க ரெடியா இருக்கிறோம். நீங்கள் இங்கு இணைந்தால் முழுமையாக வெற்றிபெறும். திருநங்கைகளின் பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் கோரிக்கை எழுப்பப்படும். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசுவார்கள் என்ற உறுதி உங்கள் முன்னால் கொடுக்கிறேன்.

சட்டப் போராட்டங்கள் நீதிமன்றத்தில் நடத்தப்படும். களப்போராட்டங்கள் தெருக்களில் நடத்தப்படும். தலித் மக்கள் பழங்குடி மக்கள் காலங்காலமாக சுரண்டப்படுகிறார்கள். அவர்களுக்காக பல இடங்களில் செங்கொடி இயக்கம் தான் தலித் மக்கள் உரிமைகளை பெறுவதற்கான பல்வேறு முயற்சிகளை எடுக்கிறது.

சாதிய பாகுபாட்டால் எண்ணற்ற தலித் மக்கள் முறிக்கப்பட்ட முதுகெலும்போடு இருந்தவர்களை மீட்டதற்கு நீண்ட வரலாறு செங்கொடிக்கு இருக்கிறது. அதைப் போன்று திருநங்கைகளின் சமத்துவத்திற்காக, வாழ்வியலுக்காக போராடி வரலாறு படைப்போம்.

இந்த பிரச்சினைகள் குறித்து அடுத்த கட்டமாக முதலமைச்சரை நிச்சயமாக சந்திப்போம். திருநங்கைகளின் கோரிக்கைகளை எடுத்து முன் வைப்போம். அரசு படியவில்லை என்றால் அதற்கான போராட்ட வடிவத்தை அமைப்போம் என்று உத்தரவாதத்தை உங்களிடம் கொடுக்கிறேன் என்று வாசுகி பேசினார்.

Tags:    

Similar News