விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் முயற்சி

விழுப்புரம் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் முயற்சி எடுத்து வருகின்றனர்.;

Update: 2022-07-13 07:30 GMT

விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கட்டை

விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதிநவீன பிளக்ஸ் புல் ஸ்பிரிங் தடுப்பு கட்டை அமைக்கும் பணியில் போக்குவரத்து போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பிளக்ஸ் புல் ஸ்பிரிங் தடுப்பு கட்டை அமைக்கும் பணியை போக்குவரத்து போலீசார் தீவிரப் படுத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ நாதா அறிவுறுத்தலின்படி விழுப்புரம் டி.எஸ்.பி பார்த்திபன் மேற்பார்வையில், விழுப்புரம் நகரில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையில், நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விழுப்புரம் -புதுவை சாலை காந்தி சிலையிலிருந்து பாணாம்பட்டு பாதை செல்லும் வரை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வாகனங்களில் நெரிசல் ஏற்படுகிறது.

இதனை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் முதற் கட்டமாக விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு சாலை பானம்பட்டு பிரிவு மற்றும் ஹவுசிங் போர்டு சாலை சந்திக்கும் இடத்தில் மாவட்ட காவல்துறை, விழுப்புரம் நகர போக்குவரத்து காவல்துறை மற்றும் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து அதிநவீன பிளக்ஸ் புல் ஸ்பிரிங் தடுப்பு கட்டை அமைக்கும் பணியை நகர போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ளனர். இந்த தடுப்பு கட்டையில் ஒளி பிரதிபலிப்பு உள்ளதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக உள்ளது. தடுப்பு கட்டையின் மீது வாகனங்கள் மோதினாலும் எந்தவித சேதமும் ஏற்படாது.

அடிக்கடி விபத்துக்குள்ளான இடத்தில்  தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டதை பொது மக்களும் வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும்  நேரடியாகவும் வலைத்தளங்கள் மூலமாகவும் போக்குவரத்து போலீசாரை பாராட்டி வருகின்றனர். விரைவில் புதுவை-விழுப்புரம் மாதா கோயில் பஸ் நிறுத்தத்தில் இருந்து காந்தி சிலை வரை மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட எஸ்.பி ஏற்பாட்டின் பேரில் இன்னும் 2 வாரத்திற்குள் அதிநவீன பிளக்ஸ் புல் ஸ்பிரிங் தடுப்பு கட்டை அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது என போக்குவரத்து போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விழுப்புரம் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக விரைவில் குறைய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News