விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய திட்டம்
விழுப்புரம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு போக்குவரத்து போலீசார் புது திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்;
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பள்ளி செல்லும் சாலைகள் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது
விழுப்புரத்தில் தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பெரிதும் பாதிகப்பட்டு வருகின்றனர்,
இதனை சரிசெய்ய முடியாமல் போக்குவரத்து போலீசாரும் திணறி வரும் நிலை தான் தொடர்ந்து வருகிறது, இந்நிலையில் விழுப்புரம் நகரத்தில் நெரிசலை குறைக்க பள்ளிகள் உள்ள இடங்களில் ஒரு வழி பாதையாக மாற்றி போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
அதன்படி, பள்ளிகளுக்கு செல்லும் சாலைகள் காலை 8.30 முதல் 10.00 மணி வரையும், மாலை 3.30 முதல் 5. 30 மணி வரையும் ஒருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
எனவே, இந்த மாற்றத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள், வாகன ஓட்டிகள், பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என போக்குவரத்து காவல் ஆய்வாளர் வசந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.