விழுப்புரம் நகராட்சியில் சிபிஎம் வேட்புமனு தாக்கல்

விழுப்புரம் நகராட்சியில் சிபிஎம் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Update: 2022-02-03 11:06 GMT

விழுப்புரம் நகராட்சியில் 41-வது வார்டில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் சிபிஎம் போட்டியிட மனுத்தாக்கல் செய்தது. விழுப்புரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன, அதில் 33 வார்டுகளில் திமுகவும், 9 வார்டுகளில் போட்டியிட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது, இந்நிலையில் திமுக மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் விழுப்புரம் நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 41-வது வார்டு ஒதுக்கப்பட்டது, அந்த வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் து.இராமமூர்த்தி புதன்கிழமை விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் போட்டியிடுவதற்கான மனுவை தாக்கல் செய்தார்.  பலர் மனு தாக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News