கண்டமங்கலம் பகுதியில் நாளை (7ம் தேதி) மின் நிறுத்தம்
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் வருகின்ற 7ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
கண்டமங்கலம் பகுதியில் வருகிற 7-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.31 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற 7-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
இதனால் கண்டமங்கலம், சின்னபாபுசமுத்திரம், வழுதாவூர், கெங்கராம்பாளையம், பி.எஸ். பாளையம், பள்ளித்தென்னல், நவமால்காப்பேரி, நவமால் மருதூர், சேஷங்கனூர், பண்ணக்குப்பம், கொத்தாம்பாக்கம், பக்க மேடு, கலிங்கமலை, கோண்டூர், வெள்ளா ழங்குப்பம், அரங்கநாதபுரம், ஆழியூர், எல்.ஆர்.பாளையம், பெரியபாபு சமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தாம்பாளையம், குயிலா ப்பாளையம், தாண்டவமூர்த்திகுப்பம், அம்மணங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப்புதுப்பட்டு, கரைமேடு, பூசாரிபாளையம், வி.பூதூர், திருமங்கலம், ரசப்புத்திரபாளையம் உள்ளிட்ட 31 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என்பதை பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.