தென்பெண்ணையாற்றின் தடுப்பணையை வெடி வைத்து தகர்க்க ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம் அருகே தென்பெண்ணையா ற்றின் தடுப்பணையை வெடி வைத்து தகர்க்க ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.;

Update: 2021-11-14 14:42 GMT

தென்பெண்ணையாறு அணை உடைந்து இருப்பதை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டார்.

விழுப்புரம் மாவட்டம், தளவானூர் என்ற இடத்தில் தென்பெண்ணை ஆற்றில் கடந்த 2020 ஆண்டு கட்டப்பட்ட  தடுப்பணை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக பெய்து வந்த வடகிழக்கு பருவமழை காரணமாக ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது.

இதனை தாக்கு பிடிக்க முடியாமல் தடுப்பணை மீண்டும் மீண்டும் உடைந்து எந்த தடுப்பு நடவடிக்கைகளும் கைகொடுக்காத நிலையில் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனையடுத்து அணையை  பார்வையிட்ட அமைச்சர் பொன்முடி புதிய தடுப்பணை கட்டப்படும் என அறிவித்து, அதற்காக அரசு  ரூ.35.37 லட்சம் ஒதுக்கீடு செய்து உள்ளது.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, உடைந்த தடுப்பணையை வெடி வைத்து தகர்க்க உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News