விழுப்புரம் அருகே கன்னிமார் சிலைகள் திருட்டு
Today Crime News in Tamil -வளவனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 7 கன்னிமார் சிலைகளை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Today Crime News in Tamil -விழுப்புரம் அருகே அகரத்துமேட்டில் பிரசித்தி பெற்ற கன்னிமார் கோவில் உள்ளது. இக்கோவிலில் அதே கிராமத்தை சேர்ந்த ஆதிலட்சுமி என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் கோவிலில் பூஜைகளை செய்து முடித்ததும் வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது கோவில் வளாகத்தில் இருந்த ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 7 கன்னிமார் சிலைகள் உடைக்கப்பட்டு திருடி சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர், உடனடியாக வளவனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார், அந்த கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், குடிபோதையில் அந்த சாமி சிலைகளை உடைத்து எடுத்துச்சென்றார்களா, அல்லது வேறு கோவிலுக்கு வைப்பதற்காக இச்சிலைகளை எடுத்துச்சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2