போலி ஆவண மூலம் நில மோசடி செய்த நபர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் நில மோசடியில் ஈடுப்பட்டவரை போலீஸார் கைது செய்தனர்
போலி நில ஆவண மூலம் 70 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுக்காவிற்கு உட்பட்ட பெரிய அகரம் பகுதியைச் சார்ந்தவர் ரங்கன் மகன் மோகன் தாஸ். இவர் செங்கல்பட்டு அரசினர் கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், இவரிடம், கடலூர் மாவட்டம்,பண்ருட்டி தாலுக்காவிற்கு உட்பட்ட திருகண்டீஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் செய்து வந்த ரா.பாலு என்பவர் கடந்த 2006 ஆண்டில் அணுகி, அச்சிறுப்பாக்கம் கிராமத்தில் விளாங்காடு கிராமத்தில் சுமார் 20 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், 1 ஏக்கர் 3 லட்சம் என்றும், பத்திர பதிவு ரூ.10 லட்சம் எனவும் ஆக மொத்தம் ரூ.70 லட்சம் என்று கூறியுள்ளார். இதைய நம்பிய மோகன்தாஸ் ரூ.70 லட்சத்தை 5 தவணைகளாக பாலுவிடம் கொடுத்தாராம்.
இதுநாள் வரை நிலத்தையும் பணத்தை திருப்பி தராமல் அலைக்கழித்து வந்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில், போலி ஆவணங்களை காட்டி ஏமாற்றி பண மோசடி செய்ததாக கடந்த 2020 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில், மோசடியில் ஈடுபட்ட பாலுவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து, செஞ்சி, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விழுப்புரம் வேடம்பட்டுவில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.