கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-30 14:28 GMT

பைல் படம்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொடக்கக் கல்வித் துறை பட்டதாரி ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும், புதிய தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் தலைமை தாங்கினார்,மாநில செயற்குழு உறுப்பினா் நாராயணன், முன்னாள் மாவட்ட தலைவா் முருகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக மாநில பொதுக் குழு உறுப்பினா் அன்பழகன் அனைவரையும் வரவேற்றாா். ஆர்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் செல்லையா கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

ஆர்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் செல்லதுரை, சசிகுமாா், குருமூா்த்தி, பாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா். முடிவில் மாவட்ட பொருளாளா் திருமலைசெல்வன் நன்றி கூறினாா்.

Tags:    

Similar News