திண்டிவனம் அருகே ஆதிகேசவ பெருமாள் கோவில் சிலையின் விரல்கள் மாயம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சிலையின் விரல்கள் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-03-06 14:42 GMT
ஆதிகேசவ பெருமாள் கோவில் சிலை (கோப்பு படம்).

திண்டிவனம் அருகே ஆதிகேசவ பெருமாள் கோவில் பஞ்சலோக சிலையின் விரல்கள் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இதில் ராதாகிருஷ்ணன் என்பவர் தினமும் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தார். பராமரிப்பின்றி கிடந்த இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் மற்றும் கிராம மக்கள் முடிவு செய்தனர். அதற்கான பணியும் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் சாரத்தை சேர்ந்த தனசேகர் என்பவர், நான் தான் இக்கோவிலை புனரமைப்பேன் என்று கூறி, கோவிலின் சாவியை ராதாகிருஷ்ணனிடம் இருந்து பெற்றுக்கொண்டார். கடந்த 2 மாதமாக தனசேகர், புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவப்பெருமாள் பஞ்சலோக சிலையில் வலது கையில் உள்ள கட்டை விரலும், இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலும் அறுக்கப்பட்டு மாயமாகி உள்ளது. இதைபார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து ஒலக்கூர் போலீசில்  கிராம மக்கள் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் கோயில்களில் உண்டியல்களில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவங்களை கண்டுபிடிப்பதில் காவல்துறை திணறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தற்போது பெருமாள் மாயமாகி இருப்பதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News