விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் ஆட்சியர் சாட்சியம்

விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று முன்னாள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சாட்சியம் அளித்தார்.

Update: 2022-06-09 16:15 GMT

விழுப்புரம் நீதிமன்றம் (பைல் படம்)

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு வடிவேல் என்ற விவசாயி ஏரியில் வண்டல்மண் எடுக்க செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்த, மனுவை பரிசீலனை செய்த வட்டாட்சியர் ஆதிபகவன், வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு தடுப்பு போலீஸார் கையும், களவுமாக பிடித்து வட்டாட்சியர் ஆதிபகவனை கைது செய்தனர். இதையடுத்து அவரை பணியிடை செய்து, அப்போதைய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு நீதிபதி(பொ) புஷ்பராணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விழுப்புரம் மாவட்டம் ஆட்சியராக அப்போது இருந்த, தற்போது தமிழக அரசு வேளாண் இயக்குநராக பணியாற்றி வரும் அண்ணாதுரை நேரில் ஆஜராகி 2 மணி நேரம் சாட்சியம் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கு வரும் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News