பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆசிரியர் கூட்டமைப்பினர் கோரிக்கை
விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை;
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம்
விழுப்புரம் சரஸ்வதி தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர், ஆசிரியர் எஸ்.செல்லையா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது,
மாநில பொருளாளர் கே.தங்கவேல் அனைவரையும் வரவேற்று பேசினார், கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் கலந்து கொண்டு கூட்டமைப்பு குறித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கட்டாய இடமாறுதலை ரத்து செய்து, விருப்ப அடிப்படையில் நேர்மையான, வெளிப்படையானா பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும், ஜாக்டோ ஜியோ தலைவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க அரசாணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
பின்னர் கூட்டத்தில் மாநில தலைவராக எஸ்.செல்லையா, மாநில பொதுச்செயலாளராக பீ.பேட்ரிக்ரெய்மாண்ட், மாநில பொதுச்செயலாளராக கே.தங்கவேல், மாநில துணைப் பொதுச் செயலாளராக இ.ஜான்கென்னடி, மாநில துணைத்தலைவர்களாக வடக்கு மண்டலம் கே.விஜியகுமார், மேற்கு மண்டலம் என்.யோகேஸ்வரன், மத்திய மண்டலம் கே.பாண்டியராஜன், தெற்கு மண்டலம் சா.சுதாகரன், மாநில துணை செயலாளர்களாக வடக்கு மண்டலம் எ.இந்திரா, மேற்கு மண்டலம் வெ.விநாயகமூர்த்தி, மத்திய மண்டலம் டி. சீதாராமன், தெற்கு மண்டலம் பி.ஜெகநாதன் ஆகியோர் ஒருமனதாக புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.