விழுப்புரம் மாவட்டத்தில் 5 நாட்கள் டாஸ்மாக் மூடல்: கலெக்டர் உத்தரவு

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தலையொட்டி ஐந்து நாட்கள் டாஸ்மாக் மூடப்படும் என கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2021-10-02 12:17 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி ஐந்து நாட்கள் டாஸ்மாக் மூடப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி வரும் 4.10.2021 காலை 10 மணி முதல் 6.10.2021 இரவு 12 மணி வரையும் 7.10.2021காலை 10 மணி முதல் 9.10.2021 இரவு 12 மணி வரையும் (ம) வாக்கு எண்ணிக்கை நாளான 12.10.2021 அன்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என விழுப்புரம் மாவட்ட  கலெக்டர் த.மோகன் உத்தரவிட்டு உள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News