டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி விழுப்புரத்தில் தீர்மானம்

விழுப்புரத்தில் நடைபெற்ற டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்;

Update: 2021-07-27 11:53 GMT

விழுப்புரத்தில் நடைபெற்ற டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது, மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்,

நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்டம், ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சியில் தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் பணிநிரந்தரம் செய்ய அறிவிப்பு செய்ய வேண்டும், டாஸ்மாக் கடையில் பணிபுரியும் அதிகமான உள்ள உபரி பணியாளர்களை அரசுத்துறையில் காலியாக உள்ள மாற்று முறையில் மாற்றுப் பணி வழங்க வேண்டுமெனவும், கொரோனா நோயால் உயிரிழந்த பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகையாக 25 லட்ச ரூபாய் வழங்க வேண்டும், டாஸ்மாக் பணியாளர்கள் பணியில் இருக்கும் போது உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர் .

இந்த செயற்குழுக் கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் பிரபாகரன், தமிிழ்நாடு அரசு பணியாளர் சங்க பொதுச்செயலாளர் அருணகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News