விழுப்புரத்தில் 20 சதவீத போனஸ் கேட்டு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் 20 சதவீத போனஸ் மற்றும் கருணை தொகை உடனடியாக வழங்க வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிங்காரவேலு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் மாவட்ட தலைவர் எஸ்.முத்துக்குமரன், மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ், 20 சதவீதம் கருணைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்,
ஆர்பாட்டத்தில் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் கணபதி, மாவட்ட பொருளாளர் சேகர், இணைச்செயலாளர் ரவிக்குமார், மாவட்ட துணைத்தலைவர் ரவி, மாவட்ட துணை செயலாளர் பழனிவேல் உட்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.