தமிழ்நாடு மக்கள் நலக்குழுவினர் காந்தி ஜெயந்தி நாளில் உறுதி ஏற்பு

Gandhi Jayanti Day -விழுப்புரத்தில் தமிழ்நாடு மக்கள் நலக்குழுவினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதி ஏற்றனர்.

Update: 2022-10-03 03:29 GMT

தமிழ்நாடு மக்கள் நல குழுவினர் காந்தி ஜெயந்தி நாளில் உறுதி மொழி ஏற்றனர்.

Gandhi Jayanti Day -ஞாயிற்றுக்கிழமை மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு சார்பில் விழுப்புரம் பாண்டி ரோட்டில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் எம்.ஐ .அலாவுதீன் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட குழு நிர்வாகிகள் அப்துல் கனி, யாசின் மௌலானா, எஸ் .ஆர் .தாஜுதீன், சுகர்னோ,சுல்தான், இப்ராஹிம் ஷா, சம்சுதீன்,பக்ருதீன் ரகுமான் சேட், ஆர். முத்துவேல் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பி. மாணிக்கமூர்த்தி, பி.ராமமூர்த்தி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.மேகநாதன் மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம் குறித்த உறுதி மொழியை வாசிக்க அனைவரும் திரும்ப படித்து  உறுதிமொழி ஏற்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News