விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பிரச்சார இயக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பிரச்சார இயக்கம் நடத்தினர்.;

Update: 2022-06-24 10:47 GMT

விழுப்புரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் பிரச்சார இயக்கம் நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் கு.சரவணன் தலைமையில் வெள்ளிக்கிழமை விழுப்புரம் அருகே இருவேல்பட்டு கிராமத்தில் பிரச்சார இயக்கம் தொடங்கியது, பிரச்சார இயக்கம் விழுப்புரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, மயிலம், திண்டிவனம், தைலாபுரம், வானூர், கிளியனூர், மரக்காணம் ஆகிய இடங்களில் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும், உறுதியளித்தபடி சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும்,41/2 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரச்சாரமாக மக்களிடையே பரபரப்புரை செய்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சிவகுமார், தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் காந்திமதி, தமிழ்நாடு நிலஅளவை ஒன்றிப்பு அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மகேஸ்வரன், தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அஜீஸ், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கிருபாகரன், டாம்சா மாநிலச் செயலாளர் ஆ.ஜா. பார்த்திபன் மாநில துணைத் தலைவர் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட துணைத்தலைவர் ஆதி சங்கரன், விழுப்புரம் வட்ட தலைவர் கோவிந்தராஜ் , தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் தேசிங்கு, தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மணிமாறன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சத்யா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மகளிர் குழு அமைப்பாளர் ஜெயந்தி, உள்ளிட்ட அரசு ஊழியர் சங்கம் சங்க நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர், முடிவில் மாவட்ட இணை செயலாளர் சாருமதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News