விழுப்புரம் அரசு கல்லூரியில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு

முதலமைச்சர் (28.10.2021) அன்று காணொலி காட்சி வாயிலாக த கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை திறந்து வைத்தார்;

Update: 2021-10-29 23:00 GMT

விழுப்புரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

விழுப்புரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் (28.10.2021) அன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி,  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர்  நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் மாவட்ட கலெக்டர் த.மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி (விக்கிரவாண்டி), டாக்டர்.இரா.இலட்சுமணன் (விழுப்புரம்). மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன், அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சிவக்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags:    

Similar News