உள்ளாட்சி பதவிகள் ஏலம்: நடவடிக்கை எடுக்க எம்பி.வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தடுக்க எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்
விழுப்புரம் எம்பி ரவிக்குமார் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு சில பஞ்சாயத்துகளில் தலைவர் பதவி ஏலம் விடுவதாகவும், பெரும்பான்மை சமூகத்தினர் தாங்கள் ஊருக்கு பணம் செலுத்தி விட்டால் போதும், மற்ற சமூகத்தினர் வாக்கு எங்களுக்கு தேவையில்லை என ஏலத்தினை நடத்துகின்றனர்,
இதை அனுமதித்தால் பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி போல் உள்ளாட்சி அமைப்புகளை சீர்குலைத்து விடும். இச்செயல் ஜனநாயகத்திற்கும், சமத்துவத்திற்கு, எதிரான செயல் இதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் என வலியுறுத்தினார்
விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார், அப்போது காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ சிந்தனைசெல்வன், மாவட்ட செயலாளர் ஆற்றலரசு உட்பட பலர் உடனிருந்தனா். முன்னதாக மத்திய அரசின் பல்வேறு மக்கள் விரோத போக்கை கண்டித்து கருப்பு கொடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.