சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு எஸ்.பி பாராட்டு
திண்டிவனம், கண்டாச்சிபுரம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்பி ஸ்ரீநாதா பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.;
விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா (பைல் படம்) .
விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றும் காவல்துறையினரை பாராட்டி, அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி, விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டிவனம், கண்டாச்சிபுரம் உள்ளிட்ட காவல் நிலைய பகுதிகளில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திண்டிவனம் உதவி ஆய்வாளர் ஞானசேகரன், தனிப்படை உதவி ஆய்வாளர் அய்யனார், காவலர்கள் ஜனார்த்தனன், பூபாலன், செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன், பரந்தாமன் மற்றும் கண்டாச்சிபுரம் ஆய்வாளர்கள் மருதப்பன், பொன்னுரங்கம் காவலர்கள் ஜீவா சிவக்குமார் ஆகியோருக்கு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.