விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிடிபட்டது பாம்பு
Villupuram News -விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.
Villupuram News -விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல தூய்மைப்பணியாளர்கள் துப்புரவு பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது சுமார் 3 அடி நீள முள்ள நல்லப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் அதனை அடிக்காமல், உடனடியாக இதுகுறித்து அவர்கள், விழுப்புரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்து நல்லப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டு வந்தனர்.அதனால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2