விழுப்புரம் ஆபத்தான பாதாள சாக்கடை பள்ளம் சரிசெய்யபடுமா?
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட 42 வது வார்டில் பாதாள சாக்கடை பள்ளத்தால் ஆபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டு பாணாம்பட்டு பாலாஜி நகரில், பாதாளசாக்கடை பணி நடைபெற்று வந்தது. அதில் சாக்கடை குழியை மூடாமல் அப்படியே விட்டு சென்றுள்ளனர். அப்பணியும் நிறைவு பெறாமல் உள்ளது.
இதனால் அப்பகுதியில் வாகன விபத்து மற்றும் குழந்தைகள் தவறி விழும் ஆபத்தான நிலை உள்ளது. எனவே பாதாள சாக்கடை பணியினை உடனடியாக நிறைவு செய்யவேண்டும், அல்லது சாலையில் அமைக்கப்பட்டுள்ள பள்ளத்தை மண் முடி அடைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.