விழுப்புரம் மாவட்டத்தில் நிலுவை வழக்குகள் 2,767 வழக்குகளுக்கு தீர்வு

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்வு காணப்பட்டன

Update: 2022-03-13 10:00 GMT

விழுப்புரத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2767 வழங்க்குகளில் தீர்வு காணப்பட்டது

விழுப்புரத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2767 வழங்க்குகளில் தீர்வு காணப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 2,767 வழக்குகளுக்குத் தீா்வு.நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி பூா்ணிமா தொடக்கி வைத்தாா். இதையடுத்து, காசோலை, விபத்து இழப்பீடு, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவை தொடா்பான 7,916 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 2,767 வழக்குகள் முடிக்கப்பட்டன. இதில், ரூ.28கோடியே 34 லட்சத்து 38 ஆயிரத்து 69-க்குத் தீா்வு கண்டனர்.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது.கூடுதல் மாவட்ட நீதிபதி - 1 ரஹ்மான் தலைமை தாங்கினார்.முதன்மை சார்பு நீதிபதி சந்தோஷ் வரவேற்றார். கூடுதல் மாவட்ட நீதிபதி-2 சுதா, கூடுதல் சார்பு நீதிபதி இளவரசி, மோட்டார் வாகன தீர்ப்பாய நீதிபதி தனலட்சுமி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி வாசுதேவன், கூடுதல் மாவட்ட உரிமையியல்

நீதிபதி சவுந்தர்யா, குற்றவியல் நடுவர் நீதிபதி-1 தாயுமானவர் ஆகியோர் முகாமில், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், தொழிலாளர் நஷ்ட ஈடு, வங்கி வழக்குகள் உட்பட 174 வழக்குகளில், 5 கோடியே 4 லட்சத்து 21 ஆயிரத்து 694 ரூபாய்க்கு தீர்வு கண்டனர்.

Tags:    

Similar News