விழுப்புரத்தில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் தொடர் திருட்டு
விழுப்புரம் நகராட்சி பகுதியில் இரண்டு வீடுகளில் திருட்டு நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
விழுப்புரம் நகராட்சி பூந்தோட்ட பகுதியில் நாராயணன் நகர்,முல்லை தெருவை சேர்ந்தவர் ராகுல் (வயது 30) இவர் நேற்று சொந்த ஊருக்கு சென்றார். இந்நிலையில் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அப்போது வீட்டின் ஓரமாக ஜன்னல் கதவு திறந்தபடி இருந்தது.
பின்னர் அங்கு சென்ற மர்ம நபர் திறந்த ஜன்னல் ஓரமாக ராகுலின் சட்டை இருந்தது. கம்பியால் சட்டையை லாவகமாக எடுத்தனர். பின்னர் அந்த சட்டையில் இருந்த வாட்ச் மற்றும் 8 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றனர். இன்று வீட்டுக்கு திரும்பிய ராகுல் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சாதுரியமாக திருடி சென்ற கொள்ளையனை தேடி வருகின்றனர்.
இதேபோன்று விழுப்புரம் மணி நகர் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அங்கு சென்று வீட்டிற்குள் நுழைந்து வீட்டினுள் பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றனர். வீட்டின் உரிமையாளர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் கொள்ளை போனதை அறிந்தார் .
இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே நாளில் 2 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.