விழுப்புரம்: எச்.ராஜாவை கடுமையாக விமர்சனம் செய்த சீமான்

விழுப்புரம் அருகே உள்ள கோலியனூரில், சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.;

Update: 2021-10-01 06:56 GMT

விழுப்புரம் அருகே கோலியனூருக்கு உள்ளாட்சியில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர்களை அறிமுகபடுத்த வந்திருந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில்

நாம் தமிழர் கட்சியையும், என்னைப் பற்றியும் தொடர்ந்து அவதூறு பேசி வரும் எச். ராஜா  ஒரு அரை மெண்டல், அரசியல் விளம்பரத்திற்காக அவர் இது போல் பேசி வருகிறார்,  மானமுள்ளவராக இருந்தால் என்னோடு ஒரே மேடையில் அவர் பேசத் தயாரா கேட்டுச் சொல்லுங்கள்?

நாட்டில் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழித்தால் மட்டுமே விவசாயம் வளர்ந்து நாடு வளம் பெறும், விவசாயம் செய்யாத நாட்டில் வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட் எதற்கு?

உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம், தொடர்ந்து கொள்கைப் பிடிப்பும், எந்தவொரு சமரசமும், இல்லாமல் தொடர்ந்து வரும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி, தேர்தலில் போட்டியிட்டு சீட்டுக்களை பெறுவது எங்கள் நோக்கம் அல்ல இந்த நாட்டை கைப்பற்றுவது எங்கள் நோக்கம்? என் பேட்டியில் அவர் தெரிவித்தார் அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News